“கம்பி, கற்களால் தாக்கி அராஜகம்..” இரு தரப்பினர் இடையே வெடித்த மோதல்… நடுரோட்டில் அடித்துக்கொண்ட மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 8, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் சாக்கடை வாய்க்கால் அமைப்பது தொடர்பான சிறிய தகராறு, இரு வேறு குழுக்களுக்கு இடையே பெரும் வன்முறை மோதலாக உருவெடுத்துள்ளது. சாக்கடை கால்வாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் தச்சுக் கம்பிகள், மரக் கட்டைகள், செங்கற்கள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி இரு தரப்பும் மாறி மாறித் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே கலவரக் காடாக மாறியது.

இந்த கொடூரத் தாக்குதலில் இரு குழுக்களையும் சேர்ந்த பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டறியவும், மோதலுக்கான பின்னணியை ஆராயவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.