டாஸ்மாக் பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… “சரக்கு அடிச்சா இனி இந்த வரியும் கட்டணுமா?”… தமிழக அரசின் புது ரூல்ஸ்…!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், காலி பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்யவும் தமிழக அரசு ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, விற்பனையாகும் ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் 20 ரூபாய்க்கு மிகாமல் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானத்தின் வகை, அளவு மற்றும் அது அடைக்கப்பட்டுள்ள பாட்டிலின் தன்மைக்கு ஏற்ப இக்கட்டணம் வேறுபடும். இந்தத் தீர்வை வரியைச் செலுத்தும் முழுப் பொறுப்பும் மதுபான வணிகர்களையே சாரும் என்பதால், பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் நடைமுறையை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்வையின் மூலம் கிடைக்கும் நிதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலப் பணிகளுக்காகவே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாய், காலி பாட்டில்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதுடன், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கும் இந்நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு முறையான மறுவாழ்வு மையங்களை அமைத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் இத்தொகை முழுமையாகப் பயன்படுத்தப்படும்.