ரூ. 100 கோடி சொத்து சுவாகா?… “மனு தாக்கல் பண்ணுங்க… நாங்க பார்த்துக்கிறோம்…” உயர் நீதிமன்றத்தின் மாஸ் அறிவிப்பு… அதிர்ச்சியில் அதிகாரிகள்… சிபிஐ பிடியில் சிக்கும் மோசடி கும்பல்…!

Spread the love

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை கோரி முறைப்படி மனுத் தாக்கல் செய்தால் அதை விசாரிக்கத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது. பழநி மலை அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் மடத்து நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், பொறுப்பு பதிவாளரின் செயல்பாடு, சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆழமாக ஆராய சிபிஐ விசாரணையே உகந்தது என வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பாக முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவு தொடர்பாகச் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, கோயில் இணை ஆணையரின் புகாரின் பேரில் போலிப் பதிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. தற்போது இவழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தற்போதைய அறிவிப்பு வழக்கின் போக்கில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, விரைவில் சிபிஐ விசாரணை கோரும் புதிய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Visaka

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

9 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

9 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

9 மணத்தியாலங்கள் ago