“டிவி என்னடா பாவம் பண்ணுச்சு?” பாகிஸ்தான் படுதோல்வி.. ஆத்திரத்தில் தொலைக்காட்சிகளை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்… மரண கலாய் கலாய்க்கும் இந்தியா..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love
கொழும்பில் நேற்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி அரைசதத்தால் (77 ரன்கள்) 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்தக் கோரத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத பாகிஸ்தான் ரசிகர்கள், அந்நாட்டின் பல்வேறு இடங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், பல ரசிகர்கள் தங்களது வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை (TV) ஆத்திரத்தில் அடித்து உடைப்பதைக் காண முடிகிறது. “பாகிஸ்தான் தோற்பதை நிறுத்தப் போவதில்லை, ரசிகர்கள் டிவி உடைப்பதை நிறுத்தப் போவதில்லை” என இந்திய நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.