அதிமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்…! ஜெயலலிதா பிறந்தநாளில்காத்திருக்கும் சர்பிரைஸ்… கதிகலங்கும் அரசியல் களம்..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று, அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மற்றும் கட்சி கட்டாயம் போட்டியிடும் என உறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவிப்பதன் மூலம், அவர்களுக்குத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளப் போதிய அவகாசம் கிடைக்கும் என இபிஎஸ் கருதுகிறார்.

இந்த முதற்கட்டப் பட்டியலில் பெரும்பாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் களத்தில் முந்துவதற்கு அதிமுக வியூகம் வகுத்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இந்தப் பட்டியலை வெளியிடுவது தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.