ரயில் பயணத்தின் அவசரங்களுக்கு இடையே நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு அழகான நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழகிய புடவை உடுத்தி, “வரப்போகும் அம்மா” (Mom-to-be) என்ற வாசகத்துடன் ஜொலித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு, சக பெண் பயணிகள் இணைந்து ரயிலிலேயே வளைகாப்பு நடத்தி அசத்தியுள்ளனர். இளஞ்சிவப்பு நிற பலூன்கள் மற்றும் வாழ்த்துப் பதாகைகளால் அந்த ரயில் பெட்டியையே ஒரு விழாக்கோலமாக அவர்கள் மாற்றியிருந்தனர். தினசரி பயணத்தின் சலிப்பை மறந்து, அந்தப் பெண்ணின் நெற்றியில் திலகமிட்டு, பரிசுகள் வழங்கி, ஆசிகளைப் பொழிந்த அந்தத் தருணம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
View this post on Instagram
இந்த அழகான கொண்டாட்டத்தின் வீடியோ இணையத்தில் வெளியான சில நாட்களிலேயே 7.81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “நல்ல உள்ளங்கள் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சியைக் கொண்டாடலாம்” என்பதற்கு இந்த ரயில் பயண வளைகாப்பு ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. வழக்கமாக நெரிசல் மிகுந்த ரயிலில், சக மனிதர்களிடம் காட்டிய இந்த அன்பு மற்றும் அக்கறை நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இதுதான் உண்மையான இந்தியா” எனத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
