“முடிச்சி விட்டீங்க போங்க” ஆட்ட நாயகன் இஷான் கிஷனுடன் பயல் கேமிங்.. என்ன சொன்னார் தெரியுமா..? இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

கொழும்பில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்த இஷான் கிஷன், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், மைதானத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய விளையாட்டு வீராங்கனை மற்றும் யூடியூபரான பயல் கேமிங் (பயல் தாரே), இஷான் கிஷானைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

   
View this post on Instagram

 

A post shared by Payal Dhare (@payalgamingg)

அந்த வீடியோவில், இஷான் கிஷானின் ஆட்டத்தைப் பாராட்டிய பயல், “இன்றைய ஆட்ட நாயகனுடன் நான் இருக்கிறேன்; நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியைத் திணறடித்துவிட்டீர்கள்” என உற்சாகமாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த இஷான் கிஷன், புன்னகையுடன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், ரசிகர்களின் ஆதரவே தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். களத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய இஷான், களத்திற்கு வெளியே பயல் கேமிங்குடன் எளிமையாகப் பேசிய இந்தத் தருணம் தற்போது சமூக வலைதளங்களில் ‘ட்ரெண்டிங்’ ஆக உள்ளது..