நான் பாகிஸ்தான்காரன் ஆனால் இந்திய அணியின் ரசிகன்… தேசிய கீதம் பாடும்போது ரசிகர் செய்த செயல்… சிலிர்ப்பூட்டும் வீடியோ வைரல்..!!

By Soundarya on கார்த்திகை 3, 2025

Spread the love

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

 

   
View this post on Instagram

 

A post shared by Arshad Muhammad (@arshadmuhammadhanif)

இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பலரும் இதை கொண்டாடி வருகிறார்கள். முன்னதாக, போட்டி தொடங்கும்போது, இந்திய வீரர்கள், தேசிய கீதம் பாடினார்கள். அப்போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தேசிய கீதத்தைப் பாடி, இந்திய வீரர்களுக்கு தனது ஆதரவு தெரிவித்துள்ளார்.