தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.
அதன் பராசக்தி என்ற ஒரே படம் அவரை தமிழ்நாடு முழுவதும் அறிந்த நடிகராக்கியது. அதன் பின்னர் தன் வாழ்நாளில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கினார்.
சிவாஜி கணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் அதிக படங்களில் சேர்ந்து நடித்தது பத்மினியோடுதான். இருவரும் இணைந்து 59 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பத்மினி சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தார்.
அப்போது சிவாஜி எம் ஆர் ராதாவின் குழுவில் ஒருவராக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். எம் ஆர் ராதாவின் இழந்த காதல் நாடகத்தைக் காண பத்மினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதைப் பார்க்க வந்த பத்மினியிடம் சிவாஜி கணேசன் “நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன். உங்களோடு சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” எனக் கூறினாராம். ஆனால் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 60 படங்களில் இணைந்து நடித்தார்கள்.
இந்த ஜோடியை அந்தளவுக்கு ரசிகர்கள் ரசித்தார்கள். இவர்கள் இருவரும் திரையில் நடிப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர்கள் கெமிஸ்ட்ரி. ஆனால் பத்மினி வெளிநாட்டுக் காரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜியும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
ஆனால் பல ஆண்டுகள் கழித்து பத்மினி தான் ஏன் சிவாஜியை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று எழுத்தாளர் அ முத்துலிங்கத்திடம் தெரிவித்தாராம். கனடாவுக்கு நாட்டிய நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக சென்ற பத்மினியை அங்குள்ள தமிழர்கள் கூடி வரவேற்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் ஏன் நீங்கள் சிவாஜியை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக் கேட்டாராம். அதற்கு ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார் பத்மினி.
ஆனால் அங்கிருந்து மீண்டும் இந்தியா கிளம்பும்போது எழுத்தாளர் அ முத்துலிங்கத்திடம் மட்டும் தனியாக “அவர் கள்ளர்… நான் நாயர் வீட்டில் பிறந்தவள். எப்படி எங்க கல்யாணம் நடக்க ஒத்துக்குவாங்க” என சலிப்புடன் சொன்னாராம். இதை அ முத்துலிங்கம் தன்னுடைய அங்க இப்ப என்ன நேரம் என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
