Connect with us

அந்த வார்த்தையை எப்படி சொல்லலாம்?… ஸ்டுடியோவை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்… இரும்புப் பெண்மனியாக அசைந்து கொடுக்காத ஜெயலலிதா!

CINEMA

அந்த வார்த்தையை எப்படி சொல்லலாம்?… ஸ்டுடியோவை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்… இரும்புப் பெண்மனியாக அசைந்து கொடுக்காத ஜெயலலிதா!

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். தன்னுடைய பதின்ம வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகமான ஜெயலலிதா தான் அரசியலில் காலடி எடுத்துவைக்கும் வரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார்.

   

எம் ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது, அதில் இணைந்த ஜெயலலிதா அதன்பின்னர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளைப் பெற்று அவரின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகவும் 6 முறை பதவியேற்றார். அரசியலைப் பொறுத்தவரை அவர் உறுதியான மனதிடம் கொண்ட இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்படுகிறார்.

   

அதே போலதான் சினிமாவிலும் அவர் இருந்தாராம். ஒருமுறை அவர் அளித்த பேட்டி ஒன்றில் “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்” என சொல்லிவிட்டாராம். அனால் அவரின் பூர்வீகம் கர்நாடகா என்பதால் , அவர் கர்நாடகாவுக்கு ஒருமுறை ஷூட்டிங் சென்ற போது அவர் நடித்துக் கொண்டிருந்த ஸ்டியொவுக்குள் சிலர் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 

‘ஜெயலலிதா தன்னை ஒரு தமிழர் என்று சொன்னதை மாற்றி கன்னடர்’ என சொல்லவேண்டும் என அவர்கள் கூச்சல் இட்டுள்ளனர். படப்பிடிப்பில் அவரோடு இருந்தவர்களும் ‘அவர்கள் இப்போதைக்கு சும்மா விடமாட்டார்கள். அதனால் மாற்றி சொல்லிவிடு’ என ஜெயலலிதாவிடம் கூறியுள்ளனர். ஆனால் ஜெயலலிதா கடைசிவரை தன்னுடையக் கருத்தை மாற்றி சொல்லவில்லையாம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறிவிட்டனராம். இதை அப்போது ஜெயலலிதாவுடன் அவருக்கு பாதுகாப்பாக இருந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான சித்ரா லட்சுமணன் பதிவு செய்துள்ளார்.

More in CINEMA

To Top