ASTROLOGY
கோவிலில் கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்கள்… எந்த பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்ன பலன்…?
கோவில்களுக்கு விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வர். ஒரு சிலர் விளக்கேற்றி கடவுளை வழிபடுவர். ஒரு சிலர் தேங்காய், பழம், பூ போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்வர். அதோடு தங்களது வழிபாட்டை முடித்துக் கொள்வர். வெகு சிலர் பொங்கல் வைத்து சாமிக்கு நெய் வைத்தியம் வைத்து வழிபடுவர். 90 சதவீத பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் வெகு சிலரே கடவுள்களுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கி தருவர். கோவில்களில் சுவாமிகளுக்கு ஆறு கால பூஜை புனஸ்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு உண்டான பலன்கள் அபாரமானதாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அபிஷேகம் ஒரு எளிய வழி. எந்த பொருளை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இனி காண்போம்.
பெரும்பாலான ஆலயங்களில் 12 திரவங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 திரவியங்கள் என்னவென்றால் எள், எண்ணெய், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழ ரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்துவர். சாமிக்கு அபிஷேகம் செய்வதால் ஆற்றல் சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பலவிதமான வழிபாடு களில் விரைவாக பலன் தருவது அபிஷேகம். ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஆனால் பொதுவாக மக்கள் பால் அபிஷேகம் செய்வதை தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அபிஷேகம் செய்வதால் நம் நினைத்த காரியம் நிறைவேறும் பிரச்சனைகள் விரைவில் தீரும் என்பது ஐதீகம்.
இறைவனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்தால் மன அமைதி பெற்று முக்தி கிடைக்கும். சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப ஒற்றுமையும் குதூகலமும் கூடும். நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் பிரச்சனைகள் தீரும். அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும். சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.
கரும்புச்சாறினால் கடவுளை அபிஷேகம் செய்தால் பிணிகள் அகன்று ஆரோக்கியம் மேம்படும். பசு தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும். எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்தால் மனதில் தோன்றும் இனம்புறியா பயங்கள் நீங்கும். தேனினால் கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் வாழ்க்கை இனிமையாகும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் தனம் தானியம் பெருகும்.
பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்த பஞ்சகவியத்தால் அபிஷேகம் செய்தால் பாவங்கள் கரையும். மங்களமும் ஆரோக்கியமும் வளமான வாழ்வையும் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யலாம். இப்படி நம் வசதிக்கேற்ப நம்மளால் முடிந்த பொருட்களை கடவுள்களுக்கு வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்வதால் நம் வாழ்க்கை மேம்படும் வளமான வாழ்வு கிடைக்கும்.