actor Rajinikanth

என்னோட பிறந்த நாளில் அந்த படத்தை ரி ரிலீஸ் செய்யுங்க – பிரபல தயாரிப்பாளரை அழைத்து கண்டிஷனாக சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

By Elango on மார்கழி 4, 2025

Spread the love

வருகிற 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள். ரஜினி ரசிகர்களுக்கு அது தீபாவளி பொங்கல் போன்ற ஒரு பண்டிகை நாளாக தான் இருக்கும். குறிப்பாக ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவர் நடித்த பழைய படங்கள் அதுவும் சூப்பர் ஹிட் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த முறை ரஜினிகாந்தே அந்த படத்தை ரிலீஸ் செய்யுங்க என்று கண்டிஷனாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படையப்பா படம்தான்.

இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த படமும் இதுதான். நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன் பெரிய அளவில் பேசப்பட்டார். படையப்பா படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்தார். அப்போது அவருடன் இணை தயாரிப்பாளராக இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டவர் பிஎல் தேனப்பன்தான். அவரை சமீபத்தில் அழைத்து பேசிய ரஜினிகாந்த், வரும் 12ம் தேதி படையப்பா படத்தை ரி ரிலீஸ் செய்யுங்க என்று கண்டிஷனாக கூறியிருக்கிறார். இப்போதைய நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் வருகிற 12ம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறார் படையப்பா.