நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் ஷூட்டிங் துவங்கி 2 ஆண்டுகளான நிலையில் பல கட்டங்களாக தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக வருகிற 12ம் தேதி வா வாத்தியார் படம் ரிலீஸ் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அதில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் 10.39 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்த கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் தருமாறு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். அதனால் வா வாத்தியார் படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
