43 வயசுல தான் எனக்கு கல்யாணம் ஆனது ; நடிகை லாவண்யா சொன்ன அதிர்ச்சி தகவல்

By Deepika

Published on:

சினிமா அனைவருக்கும் கைகொடுப்பதில்லை அப்படி சினிமாவில் பல படங்கள் நடித்தும் தனக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்காமல் போனவர் தான் நடிகை லாவண்யா. ஹீரோயின் தோழியாக ஆரம்பித்து, அக்கா, தங்கை, அண்ணி வேடங்களில் நடித்து பிரபலமான இவரை நாம் மறக்க முடியாது. குறிப்பாக படையப்பா படத்தில் மணிவண்ணன் மகளாக, நாசர் மனைவியாக நடித்தவர் தான் நடிகை லாவண்யா.

Lavanya in padayappa

சூர்யவம்சம் படத்தில் ஸ்வப்னா என்ற சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தவர், படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தலைமகன் உள்ளிட்ட பெரிய படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் 2014ல் நான் தான் பாலா படத்தில் கடைசியாக நடித்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் பகாசுரன் படத்தில் நடித்திருக்கிறார் நடிகை லாவண்யா ரவி. அதைத்தொடர்ந்து தற்போது ஒருசில சீரியலில் நடித்தும் வருகிறார்.

   
Lavanya marriage

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணமே ஆகியுள்ளது. கேக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், சென்ற ஆண்டு தன்னுடைய 43 ஆம் வயதில் தான் இவர் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணம் வாழ்க்கை நன்றாக உள்ளது, சமீபத்தில் தான் திருமண நாளை கொண்டாடினோம் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போனது கவலை தான், இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளேன், அதுவே பெரிய வரம் தான் என கூறியுள்ளார் லாவண்யா.

Actress lavanya about her career

சினிமாவில் சிறு ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது கஷ்டமாக தான் இருக்கும் என்றும் பல படங்களில் நான் நடித்த சில காட்சிகள் படம் வெளியாகி பார்க்கும் போது இருக்காது என்றும் கூறியிருக்கிறார். கேரவன் அந்த காலத்தில் இல்லாத போது, ஆடை மாற்றும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடு செட்டப் இருக்கும். ஆனால், வேஸ்டிகள் கட்டி இருக்கும் அங்க தான் ஆடை மாற்றுவோம். அதன்பின் தான் இந்த கஷ்டத்தை பார்த்து மணிவண்ணன் அவரது கேரவன் எடுத்து வந்து எங்களை மாற்ற சொல்வார் என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

author avatar
Deepika