ஆனந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் லிங்குசாமி. அதைத்தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் அதைத்தொடர்ந்து வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2 என தொடர் தோல்விகளை சந்தித்தார். அதன்பின் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து வாரியார் என்ற படத்தை இயக்கினார். துரதிஷ்டவசமாக அதுவும் தோல்வியை தழுவியது.
என்னதான் மிகப்பெரிய ஹிட்களை கொடுத்த இயக்குனர் என்றாலும் தொடர் தோல்விகளால் இந்தத் நடிகரும் இவருடன் பணியாற்ற முன்வரவில்லை. வயதாகிறது, இவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என நெட்டிசன்கள் ஒருபக்கம் இவரை கலாய்த்து வருகின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ஹரி போன்ற இயக்குனர்களின் நிலைமையும் இதேதான்.
லிங்குசாமியின் கேரியரில் பெரிய இடி என்றால் அது அஞ்சான் தோல்வி தான். இன்னும் இந்த படத்தை ட்ரோல் செய்பவர்கள் உண்டு. ஏன் சூர்யா கெரியரில் மோசமான படம் என்று அவரையும் பலர் விமர்சித்தனர். இந்தநிலையில், அஞ்சான் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் லிங்குசாமி. அவர் கூறியுள்ளதாவது, குறுகிய காலகட்டத்தில் படத்தை எடுத்து முடிக்க கட்டாயம் ஏற்பட்டதுதான் அதன் தோல்விக்கு காரணம்.
இன்னும் மெனக்கெட்டு சிறப்பாக செய்திருக்கலாம், இப்போது அதில் சில மாற்றங்களை செய்து ரீஎடிட் கொடுத்து ரீரிலீஸ் செய்ய உள்ளோம் என கூறியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. கண்ணாடிய திருப்பினால் வண்டி எப்படி ஜீவா ஓடும் என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.