ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் கனா. தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் பிரிந்து வாழும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள்? ஓட்டப்பந்தய போட்டியில் தடைகளை தாண்டி கதாநாயகி எப்படி சாதிக்கிறார் என்பதை கதைக்களம்.
இந்த சீரியலில் நடிகை தர்ஷனா அன்பரசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்து வருகிறார். 90-களில் நடிகை கீர்த்தனா உங்கிட்ட ஏராளமான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தர்ஷனா சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியானது. நடிகை தர்ஷனாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகுகிறார்.
அதற்கு பதிலாக பிரபல நடிகை டோனிஷா கனா சீரியலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தெலுங்கில் ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியலிலும் மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கதாகும்.