படையப்பா படத்தில் நடித்த லாவண்யா இப்போ எப்படி இருக்காங்க? என்ன பண்றாங்க தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!!

By Priya Ram on மார்ச் 23, 2024

Spread the love

நடிகை லாவண்யா சரத்குமார் நடித்த சூரிய வம்சம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து விஜயின் பத்ரி, கமல்ஹாசனின் தெனாலி, ரஜினிகாந்தின் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

   

44 வயதாகும் லாவண்யா 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் அவர் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

   

 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். அந்த சீரியலில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 44 வயதாகும் லாவண்யா தொழில் அதிபரான பிரசன்னா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் படையப்பா படத்தில் நாசரின் மனைவியாக நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram