அடுத்த பஹத் பாசில் நான் தான் ; குரேஷியின் தீராத ஆசை

By Deepika

Published on:

 

கலக்க போவது யாரு மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் குரேஷி. தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து படத்திலும் அப்படியே இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பங்கு பெற்று வருகிறார். அதிலும் இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார்.

   
Kuraishi in ipl scam

குறிப்பாக குக் வித் கோமாளியில் இவர் அடிக்கும் சேட்டைக்கு அளவே கிடையாது. காமெடியில் கலக்கும் குரேஷி அவ்வப்போது சர்சைகளிலும் சிக்குவது உண்டு. சமீபத்தில் கூட ஐபில் டிக்கெட் ஸ்கேமில் சிக்கினார் குரேஷி, அவரின் பெயரை, வீடியோவை பயன்படுத்தி அவரை இந்த பிரச்சனையில் சிலர் இழுத்து விட்டனர்.

Kuraishi

இந்தநிலையில், சமீபத்திய பேட்டியில் பேசிய குரேஷி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியுள்ளதாவது, நான் பல தடைகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன், என்னுடைய முதல் வெற்றி கலக்க போவதை யாரு தான். அதன்பின் எனக்கு தொகுப்பாளராக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதுவும் நடந்து விட்டது. இப்போது சினிமா ஆசை உள்ளது.

Kuraishi about his career plan

சினிமாவில் ஏனோ தானோ என நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், தமிழகத்தின் பகத் பாசில் ஆக வேண்டும் என்பது தான் என் ஆசை. கூடிய விரைவில் அந்த ஆசி நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார். இதை கேட்ட குரேஷியின் ரசிகர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல கதைகள் வரும், நீங்கள் சிறந்த நடிகராக விளங்குவீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

author avatar
Deepika