இயக்குனரை தொடர்ந்து இன்னொரு அவதாரம் எடுக்கும் விஷால்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தாராம் இயக்குனர் ஹரி..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகரான விஷால் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு விஷால் ஹரி இயக்கத்தில் நடிக்கும் மூன்றாவது படம் இதுதான். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

   

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோ சவுத் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனங்களின் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரத்னம் படம் உருவாகி இருக்கிறது. தற்போது வந்த தகவலின் படி ரத்னம் படத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் திரையரங்கங்களின் உரிமையை விஷால் வாங்கிவிட்டாராம். இதற்கு இடையே விஷால் தான் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் அந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அப்படி இருக்க ரத்னம் படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கி விநியோகஸ்தராகவும் விஷால் களம் இறங்கி விட்டார். ஏனென்றால் ரத்னம் படம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Priya Ram