சிவகார்த்திகேயனை கேப்டன் விஜயகாந்த்தோடு இணைத்த முருகதாஸ்.. 23 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் நடந்த ஷூட்டிங்.. அவரே பகிர்ந்த புகைப்படம்..!!

By Priya Ram

Published on:

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

   

அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

கடந்த மாதம் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கியது. முதல் கட்ட படபிடிப்பு மும்முரமாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, 23 ஆண்டுகளுக்கு முன்பு ரமணா படத்தின் ஷூட்டிங் எங்கு நடந்ததோ அதே இடத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயனின் 23-வது படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் ஷூட்டிங் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளார். விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படம் மாபெரும் அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram