தமிழில் கமர்சியல் ரீதியான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற மாபெரும் இயக்குனர் தான் கே எஸ் ரவிக்குமார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சூப்பர் ஹிட் இயக்குனர் தான் சேரன். பல திரைப்படங்களில் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்றிய அவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த 27 ஆண்டுகால பயணத்தில் குறைந்த அளவிலான படங்களை சேரன் இயக்கியுள்ளார் என்றாலும் அவரின் திரைக்கதை எழுதும் திறனுக்கு இணை அவரே என்று சொல்லும் அளவுக்கு பல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.

நடிகராகவும் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகின்றார். இப்படியான நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியாகிய பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் அடித்த திரைப்படம் தான் வெற்றி கொடி கட்டு. இளைஞர்கள் வெளிநாட்டு வேலையின் மீது உள்ள மோகத்தை விட்டு விட்டு தனது சொந்த ஊரிலேயே பெரிய அளவில் பாடுபட்டால் நிச்சயம் முன்னேறி விடலாம் என்ற ஒரு கதை அம்சத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பே சேரன் அழகாக சொல்லி இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், முரளி மற்றும் மீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்று இருந்த நிலையில் 5 பாடல்களுமே 5 வெவ்வேறு பாடல் ஆசிரியர்களாக எழுதப்பட்டது. குறிப்பாக பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட்டடித்த கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலை பா.விஜய் எழுதியிருந்தார். ஆனால் உண்மையிலேயே இந்த கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலை முதலில் தொடங்கி வைத்தது வைரமுத்து தான். முழுக்க முழுக்க தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக கருப்புதான் எனக்கு புடிச்ச வர்ணம் என்று தான் முதலில் வைரமுத்து அந்த பாடலை எழுதினார்.

ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கலந்து கொள்ளலாமே முழுமையாக தமிழாக இருந்தால் அந்த பாடல் அவ்வளவு எடுபடாது என்று சேரன் எவ்வளவு கூறியும் அந்த பாடலை மேற்கொண்டு எழுத வைரமுத்து மறுத்தார். இறுதிவரை சேரன் போராடியும் அவருக்கு கிரீன் சிக்னல் கிடைக்காத சூழலில் தான் பா.விஜய்யை வைத்து அந்த பாடலை சேரன் முழுமையாக எழுதி முடித்துள்ளார். இன்றளவும் பலருக்கும் அந்த பாடல் பிடித்தமான பாடல்களில் ஒன்றாக உள்ளது.
