பெரிய வீடு மட்டும் கட்டாத.. பாரதிராஜாவுக்கு நடிகர் திலகம் சிவாஜி கொடுத்த அட்வைஸ்.. அனைவரையும் வியக்க வைக்கும் காரணம்..!

By Nanthini on சித்திரை 4, 2025

Spread the love

ஸ்டியோவில் மட்டுமே இயங்கி வந்த தமிழ் சினிமாவை வாய்க்கால், வரப்பு, காடு மேடு போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயது பிள்ளை படத்தின் வெற்றி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. இப்படி ஒரு படம் வந்து ஓடிவிட்டது இனிமேல் நாம் என்ன பண்ண போவது என்று பல இயக்குனர்களையும் நடிக. மண்வாசனை மிக்க பல திரைப்படங்களையும் பாரதிராஜா இயக்கினார். எண்பது காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருந்தார். இவருக்கு பிறகு சினிமாவில் பல முக்கிய இடத்தை பிடித்த இயக்குனர்கள் பாரதிராஜாவின் சிஷ்யர்களாக இருந்தார்கள். சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி | nakkheeran

   

சிவாஜியை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் தான் முதல் மரியாதை. சிவாஜிக்கு மேக்கப் போடாமல் விக் வைக்காமல் அடிக்க வைத்த ஒரே இயக்குனர் என்றால் அது பாரதிராஜா மட்டும்தான். சிவாஜி என்றாலே ஓவர் ஆக்டிங் என்று சொன்னவர்கள் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு வாய் அடைத்துப் போனார்கள். அந்த அளவிற்கு சிவாஜியை மிகவும் இயல்பாக பாரதிராஜா நடிக்க வைத்திருந்தார். இதனால் சிவாஜிக்கும் பாரதிராஜாவை மிகவும் பிடிக்கும். இப்படியான நிலையில் ஒருமுறை சிவாஜியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக அங்கே சென்ற பாரதிராஜா சிவாஜி இடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்.

   

நடிப்பு கற்க கல்லூரி வேண்டாம் - சிவாஜி போதும்

 

அதற்கு சிவாஜி, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன். கமலாவும் என்னிடம் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு மணி ஆகிவிட்டதால் காபி போட போய்விட்டார். அப்போது எனக்கு திடீரென்று நெஞ்சு வலி. வழக்கமாக என் படுக்கையில் மாத்திரை இருக்கும். ஆனால் அருகில் இருந்த மாத்திரையை என்னால் எடுக்க முடியவில்லை. அவ்வளவுதான் சாகப் போகிறேன் என்று நினைத்தேன். பிரபு மற்றும் ராம்குமார் என்று கத்தியும் யாருக்குமே கேட்கவில்லை. சினிமாவில் நான் எப்படி கத்தி கத்தி வசனம் பேசி இருக்கிறேன். ஆனால் அன்று நான் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. நல்ல வேலையாக காபி கொடுப்பதற்கு கமலா வந்தாள். அதன் பிறகு நான் தற்போது இங்கே இருக்கிறேன் என்று சிவாஜி கூறியுள்ளார்.

தமிழை உச்சரிக்க சொல்லிக்கொடுத்தவர் சிவாஜி!'' - இயக்குநர் பாரதிராஜா  நெகிழ்ச்சி | sivaji - bharathirajaa - hindutamil.in

அதன் பிறகு சொந்த வீடு கட்டி இருக்கிறாயா என்ற சிவாஜியை பாரதிராஜாவிடம் கேட்க, பாரதிராஜாவும் நான்கு வீடுகள் கட்டி இருக்கிறேன் என்று பதில் சொல்ல அந்த வீடுகள் பெரியதாக இருக்குமா என்று சிவாஜி கேட்க ஓரளவுக்கு பெரியது ஏன் கேக்குறீங்க என்று பாரதிராஜா கேட்டுள்ளார். உடனே சிவாஜியின், வீட்டை பெரிதாக கட்டாதே, நீ கூப்பிட்டால் உன் குரல் மற்றவர்களுக்கு கேட்க வேண்டும். அந்த அளவுக்கு மட்டும் வீடு இருந்தால் போதும் என்று பாரதிராஜாவுக்கு சிவாஜி அட்வைஸ் சொல்லியுள்ளார். இது பாரதிராஜாவுக்கு மட்டும் கொடுத்த அட்வைஸ் அல்ல அனைவருக்கும் மே கொடுத்த அட்வைஸ் என்று நாம் எடுத்துக் கொள்வது சிறந்தது.