தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். சமீபகாலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் அரசியலை ஆதரிப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை 2 திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

சூர்யாவை வைத்து இந்த திரைப்படத்தை அவர் இயக்க உள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகளும் உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறனின் மனைவியை ஆர்த்தி தனது கணவரின் சிகரெட் பழக்கம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் எடுத்த மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று என்றால் அது புகை பிடிப்பதை விடுவது தான்.

2003 ஆம் ஆண்டு அந்த முடிவை எடுத்தார். எனக்கு நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது என்று சொன்னார். அப்போது ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆஞ்சியோ செய்தோம். அப்போது மருத்துவர்கள் நீங்கள் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியிலேயே காரை நிறுத்த சொல்லி ஒரு சிகரெட் வாங்கி பிடித்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் அப்போது கூட நான் அவரை புகைபிடிப்பதை நிறுத்த சொல்லி வற்புறுத்தவில்லை. இருந்தாலும் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

ஆனால் போக போக தான் நலமாக இருந்தால்தான் தன்னுடைய கனவில் சாதிக்க முடியும் என்று புரிந்து கொண்ட அவர், நான் பெரிய கனவை வைத்திருக்கிறோம், அதற்கு குறைந்தபட்சம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவர் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிகரெட் பிடிப்பதை அப்படியே விட்டு விட்டார். மேலும் அவரது ஆபீசில் கூட யாரும் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் சொல்லிவிட்டார் என வெற்றிமாறன் மனைவி கூறியுள்ளார்.
