Connect with us

எனக்கும் MGR க்கும் 5000 ரூபாய்தான் சம்பளத்தில் வித்தியாசம்… ஆனால் அந்த வித்தியாசத்தில்தான் அவர் முதல்வர் ஆனார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

CINEMA

எனக்கும் MGR க்கும் 5000 ரூபாய்தான் சம்பளத்தில் வித்தியாசம்… ஆனால் அந்த வித்தியாசத்தில்தான் அவர் முதல்வர் ஆனார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான சிரிப்பே ரசிகர்களைப் பயமுறித்தி அவர் மேல் வெறுப்பை வரவழைக்கும். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் பல படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த அவரை பொது இடத்தில் மக்கள் பார்த்தால் கூட அவரை கரித்துக் கொட்டுவார்களாம்.

இவரை வில்லனாக பிரபலப்படுத்தியது இரண்டு படங்களில் அவர் பேசிய இரண்டு வசனங்கள். எம்.ஜி.ஆர் சாவித்திரி நடித்த மகாதேவி திரைப்படத்தில் ”மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” என்று அவர் பேசிய வசனம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

   

அதேபோல வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா இடையே நடன போட்டி நடக்கும் போது ”சபாஷ் சரியான போட்டி” என்ற வசனமும் வைரலான ஒன்று. இப்படி வில்லனாக மிரட்டிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் அவர் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்தார். தொடர்ந்து எம் ஜி ஆர், இவரை தன் படங்களில் வில்லனாக நடிக்க வைத்தார். அதனால் ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் படங்கள் என்றால் அதில் வில்லன் வீரப்பாதான் என்று ரசிகர்கள் தானாகவே முடிவு செய்துவிடுவார்கள்.

   

இதனால் அவரின் சம்பளமும் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதுபற்றி அவரே ஒருமுறை சிவகுமாரிடம் பகிர்ந்துகொண்டாராம். அதில் “எம் ஜி ஆருக்கு ஒரு லட்சம் சம்பளம் என்றால் எனக்கு 95000 ரூபாய் சம்பளம். எனக்கும் அவருக்கும் சம்பளத்தில் 5000 ரூபாய்தான் வித்தியாசம். ஆனால் அந்த 5000 க்கே மக்கள் அவரிடம் நாட்டையேக் கொடுத்துவிட்டார்கள். என்னை எல்லோரும் மறந்தே போய்விட்டார்கள். நான் படம் தயாரித்து நடுத்தெருவில் நின்றேன்.” எனக் கூறினாராம். இதை சிவகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

More in CINEMA

To Top