செம குஷியில் இபிஎஸ்.. களத்தில் இறங்கிய சி.வி.சண்முகம்… அதிமுகவில் 500+ நிர்வாகிகள் கூண்டோடு ஐக்கியம்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதனைப் போலவே அதிமுகவும் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. தினமும் கட்சியினர் பலரும் மாற்றுக் கட்சிகள் இணைந்து வருவது தொடர்கதை ஆகிவிட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் மாற்றுக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் சிவி சண்முகம் எம்பி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் அதிமுகவில் துண்டை அணிவித்து கட்சியில் இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் நெருங்கி விடுவதால் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை அதிமுக தங்களுடன் தொடர்ந்து இணைத்து வருகின்றது.