அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
அதே சமயம் அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்கவும் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறிவந்த நிலையில், இன்று முன்னாள் எம்எல்ஏ சி. கிருஷ்ணன் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைவார்களா என்று செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு பொங்கலுக்கு முன்பே இருவரும் இணைவார்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் விஜய் கட்சியில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
