ராமதாஸ் நடத்தும் கடைசி யுத்தம்… இன்று அதிரப்போகும் சேலம்… பாமகவின் பிரம்மாண்ட பொதுகுழு கூட்டம்… ஒட்டுமொத்த அரசியலே உற்று நோக்கும் தருணம்..!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வீடியோவில், எனக்கு வயதாகி விட்டது, புத்தி பேதலித்து விட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்றெல்லாம் அன்புமணி கும்பலை சேர்ந்த சிலர் அசிங்கப்படுத்துகிறார்கள். அதனை தாங்க கூடிய சக்தி எனக்கு உள்ளது. ஆனால் என் உழைப்பில் உருவான கட்சியை தயவு செய்து காயப்படுத்த வேண்டாம். அன்புமணிக்கு எம்பி, மத்திய அமைச்சர், தேர்தலில் தோற்றப் பிறகும் ராஜ்யசபா எம்பி என எல்லாமே கொடுத்தோம். ஆனால் அவர் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றவில்லை. மக்களுக்காக உழைக்கவில்லை. ஒரு காலத்தில் பாமகவிற்கு இருவது எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கின்றது. என்னை ஏமாற்றியவர்களை மன்னிப்பேன்.

தொண்டர்கள் ஏமாற விடமாட்டேன். உருவாக்கிய பாமகவை பாதுகாப்பதற்கு இன்று சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது சாதாரண கூட்டம் கிடையாது. பாமகவின் மறுபிறப்பு. வருகின்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற நம்முடைய கட்சியின் சின்னம் மற்றும் இழந்த அங்கீகாரத்தை மீட்க வேண்டும். பெற்ற தந்தைக்கு துரோகம் செய்பவர், இந்த இயக்கத்தை, மக்களை எப்படி காப்பாற்றுவார். நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும் என் மக்கள் என்னுடன் இருப்பார்கள் என்று நம்புகின்றேன் என்று ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார். பாமகவில் அப்பா மகன் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டம் அரசியலில் கவனம் பெற்றுள்ளது