FLASH: பணியிடை நீக்க உத்தரவு… அருண் IPS க்கு எதிராக ஐகோர்ட் அதிரடி கருத்து..!!

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ்-க்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவை, DVAC இயக்குநர் அருண் பணியிடை நீக்கம் செய்திருந்தார். இந்த பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆய்வாளர் விமலாவுக்கு எதிரான அருணின் இந்த பணியிடை நீக்க உத்தரவு உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றம் கடுமையான கருத்தைத் தெரிவித்துள்ளது. DVAC அறிவுறுத்தியதன் காரணமாகவே விமலா சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுத்தார் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.