தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திரைக்கு முன்னும் பின்னும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் தமிழகத்திற்கு வந்திருந்தார். இவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்ட நிலையில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரம் எடப்பாடிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு பிரதமரை சந்தித்தார்.
இந்நிலையில் மோடி, அமித்ஷா என பாஜகவிலிருந்து அடுத்தடுத்த புறக்கணிப்பால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதனிடையே, பாஜக கூட்டணி மிகவும் ஆபத்தானது என ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சூடு தணிவதற்குள் தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் NDA-வில் இருந்து விலகி, TVK கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் நாளை தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…