திடீர் திருப்பம்… மீண்டும் அதிமுகவில் இணையும் ஓபிஎஸ்?… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கட்சியில் இணைய மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சியை தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். குருமூர்த்தி மற்றும் ஓபிஎஸ் நள்ளிரவு சந்திப்புக்கு பிறகு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஐ மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.