கோவாவின் பனாஜியில் நேற்று ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. காரை ரிவர்ஸ் எடுத்தபோது, ஒரு பாதசாரி மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயது முகுல் ஜோஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
#Panaji 🚨⚠️ #StopDrinkAndDrive
Disturbing Visuals 🚨🚨 #Drunk #Driver while reversing Polo, rammed pedestrian. 2nd similar incident after Pune while reversing…@DriveSmart_IN @dabir @InfraEye @sss3amitg
pic.twitter.com/n45BjcP9Ue— Dave (Road Safety: City & Highways) (@motordave2) December 2, 2025
சம்பவம் நடந்த நேரத்தில், காரை ஓட்டி வந்த 18 வயது ஷாஹித் மொஹரம் அன்சாரி குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கோவாவின் தலேகாவ்ன் பகுதியில் வசிப்பவர். இந்த சம்பவம் டிசம்பர் 2 ஆம் தேதியான நேற்று காலை 8 மணியளவில் நடந்தது.
