தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.
அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றுபட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்துவரும் செங்கோட்டையனை நேற்று இரவு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதுவரை தொலைபேசி மூலமாக மட்டுமே பேசி வந்த ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஓரிரு நாட்களில் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இரு தரப்பும் நேற்று ஆலோசனை செய்துள்ளன. இதில் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…
ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…