திடீர் திருப்பம்…. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்ன மகன்… ஓபிஎஸ் எடுத்த தடாலடி முடிவு…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமான நிலையில், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தற்போது தீவிர அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் ஓபிஎஸ்-க்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட சூழலில், ரவீந்திரநாத்திற்குச் சீட் மறுக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுகவில் இணைந்து 5 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இருவருக்குமே இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

தொடக்கத்திலிருந்தே தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவே ரவீந்திரநாத் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதற்காக விஜய் தரப்புடன் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சுமார் ஒரு மாத கால காத்திருப்புக்குப் பிறகு தவெக தலைமையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. “ஓபிஎஸ் உங்களுடன் இணைந்து வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும்; மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளில் பாதியையாவது நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று தவெக தலைமை நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

தவெக-வின் இந்த நிபந்தனையைத் தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் செல்வோம் என்று தந்தையிடம் ரவீந்திரநாத் பேசியுள்ளார். ஆனால், பதவியை ராஜினாமா செய்யும் பேச்சிற்கே இடமில்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ரவீந்திரநாத் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

   

தற்போது திமுகவில் கட்சி மறுசீரமைப்புப் பேச்சுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் முக்கியப் பொறுப்பைக் கைப்பற்ற ரவீந்திரநாத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கட்சிக்குத் தங்களின் விசுவாசத்தை முழுமையாக நிரூபித்த பிறகே பதவிகளை வழங்குவது குறித்து யோசிக்க முடியும் என்பதில் திமுக தலைமை மிகவும் தெளிவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.