யாருமே எதிர்பார்க்கலையே.! நாளை நடக்கும் NDA கூட்டம்… ஓபிஎஸ் + பிரேமலதாவுக்கு பேரதிர்ச்சி…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டணிப் பொதுக்கூட்டத்திற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் விளம்பரங்களில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இவர்கள் இருவரும் பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்களது படங்கள் தவிர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படாததே இதற்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஓபிஎஸ் மற்றும் தேமுதிக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான உறுதிப்பாடு வழங்கப்படாததால், பாஜக இப்போதைக்கு இவர்களைத் தவிர்த்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.