விசில் போடுவோம்..! இதுவே நமது முதல் வெற்றி.. சின்னம் குறித்து நடிகர் விஜய் உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தேர்தல் ஆணையம்  ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் (X) தளத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலர்கள் மற்றும் மக்களின் பாதுகாவலர்களின் கையில் இருக்கும் ‘விசில்’ சின்னம் தவெகவுக்குக் கிடைத்தது, கட்சியின் முதல் வெற்றி அத்தியாயம். விசில் ஆனந்தம், பாதுகாப்பு, நேர்மறை மாற்றத்தின் குறியீடாகும். நல்லவர்கள், ஊழலை ஒழிப்பவர்கள், மக்கள் பாதுகாவலர்கள் அனைவரின் சின்னம் விசில் என கூறி, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்; விசில் போடுவோம் என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசில் சின்னம் இனி ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் ஒரே அடையாளமாக இருக்கும் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றி பெற்று புதிய வரலாறு படைப்பது உறுதி எனத் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.சின்னம் கிடைத்த உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.