CINEMA
அஜித் ரசிகர்கள் சொன்னது..? விஜயின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு.. உண்மையை சொன்ன பிரபலம்..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வருகிற ஐந்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். விஜயின் 69 ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார்.
இதற்கு இடையே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். சமீபத்தில் தான் இந்த கட்சியின் கொடியும் கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வலைப்பேச்சு யூடியூப் சேனலின் ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சி துபாயில் வைத்து நடைபெற்றது. அப்போது ரசிகர்களிடம் ஏராளமான கேள்விகள் கேட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு 51 சதவீதம் பேர் ஆமாம் எனவும், 18 சதவீதம் பேர் இல்லை எனவும், 31 சதவீதம் பேர் கருத்து இல்லை எனவும் பதில் அளித்துள்ளனர். மேலும் அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவிலிருந்து விஜய் விலகுகிறார். அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேள்விக்கு 34 சதவீதம் பேர் ஆமாம் எனவும், 29 சதவீதம் பேர் இல்லை எனவும், 37 சதவீதம் பேர் கருத்து இல்லை எனவும் கூறியுள்ளனர்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களை கவர்ந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அஜித் என பதில் கூறியவர்களும், நீங்கள் எதிர்பார்க்கும் திரைப்படம் எது என்று கேள்விக்கு விடாமுயற்சி என பதில் அளித்த அஜித் ரசிகர்கள் பெரும்பாலானோர் விஜயின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் விஜயின் அரசியல் வருகையை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் கூறியுள்ளனர் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.