Connect with us

கோவில் வாசலில் வளையல் விற்றவரை ஹீரோ ஆக்கிய பாரதிராஜா… யார் அந்த ஹீரோ தெரியுமா…?

CINEMA

கோவில் வாசலில் வளையல் விற்றவரை ஹீரோ ஆக்கிய பாரதிராஜா… யார் அந்த ஹீரோ தெரியுமா…?

பாரதிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இயக்குனர் இமயம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் பாரதிராஜா. கிராமப்புற வாழ்க்கையை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் தனது படங்களில் சித்தரிப்பதன் மூலமாக பிரபலமானவர் பாரதிராஜா.

   

ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளர் புட்டண்ணா கனகதன் பின்னர் பி பிள்ளையா, எம் கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி மற்றும் ஏ ஜெகநாதன் ஆகியோருக்கு உதவியாளராக இருந்த பாரதிராஜா, 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கடல் பூக்கள் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா.

   

தனது இயக்கத்திற்காக ஆறு தேசிய திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், ஆறு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு நந்தி விருது ஆகியவற்றை வென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கியது. 2005 ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகம் பாரதிராஜா அவர்களுக்கு டாக்டர் ஆப் லெட்டர்ஸ் என்ற கௌரவப்பட்டதை வழங்கியது.

 

பாரதிராஜா அவர்கள் தனது படங்களில் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் ஒரு ஹீரோ புதுமுகமாக அறிமுகமானதற்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கின்றது. அது என்னவென்றால் மண்வாசனை திரைப்படம் இயக்குவதற்கான கதையை எழுதி முடித்து விட்ட பிறகு பாரதிராஜா லொகேஷன் பார்ப்பதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வந்த அவர் ஒரு வளையல் கடையில் வளையல் விற்கும் ஒரு பையனை பார்த்து இருக்கிறார். அந்தப் பையன் நல்ல சிவப்பாகவும் எடுப்பாகவும் வாட்டசாட்டமாகவும் இருந்துள்ளான்.

அந்தப் பையனிடம் சென்ற பாரதிராஜா நான் ஒரு படம் எடுக்குறேன் என் படத்துல நீ ஹீரோவா நடிக்கிறியா அப்படின்னு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பையனோ இல்ல சார் எனக்கு நடிக்கலாம் ஒன்னும் தெரியாது அப்படின்னு சொல்லி இருக்கிறான். இல்ல நீ அதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாத நான் உன்னை நடிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்லி அந்த பையனை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அப்படி அவர் ஒரு வளையல் விற்கும் பையனை தனது படத்தில் நடிக்க வைத்த அந்த ஹீரோ வேறு யாருமில்லை நடிகர் பாண்டியன் தான். பாரதிராஜாவால் புது வாழ்க்கையை பெற்ற பாண்டியன் அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல நடிகர் நடிகைகளுக்கு வாழ்க்கையை கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

More in CINEMA

To Top