தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது. விவசாய கூலிகளாக இருக்கும் பெண்களுக்கு சொந்த நிலம் வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் என ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு இ- சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். CM-ARISE, PM-AJAY என்ற திட்டத்திற்கு தகுதியுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா? சமூக பெண்கள் விண்ணப்பிக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் க்குள் இருக்க வேண்டும். 2.5 ஏக்கர் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலங்கள் வாங்கிக் கொள்ள முடியும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். 18 முதல் 55 வயது உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கு விற்கவும், மாற்றவும் முடியாது. திட்டத்திற்கு கீழ் நிலம் வாங்கும் பெண்கள் பதிவு கட்டணம் கிடையாது. ஆழ்துளை கிணறு மற்றும் பம்பு செட்டுக்கும் மானியம் வழங்கப் போவதாக அரசு கூறியுள்ளது. இன்னும் பல சலுகைகள் உள்ளது தகுதி உள்ள பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பியுங்கள். உங்கள் சிரமத்தை குறைப்பதற்காகவே தாட்கோ நிறுவனம் இ-சேவை மையம் வழியாக நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
