அச்சச்சோ…! எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை….!! ஷோரூமில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2025

Spread the love

டெல்லி நிர்மல் விஹாரில் மஹிந்திரா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கு மாணி பவார் என்ற பெண் புதிதாக மஹிந்திரா தாரை முன்பதிவு செய்த நிலையில், நேற்று முன்தினம் பூஜை செய்து காரை எடுத்துச் செல்ல வந்தார். அதன்படி புதிய காருக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாணி பவார் காரின் 4 பக்க டயருக்கு அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கியுள்ளார். அப்போது ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவர் காரில் அமர்ந்திருந்தார்.

அவர் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் ஷோரூமின் முதல் மாடியில் கண்ணாடியை உடைத்து வெளியே பறந்து விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். தற்போது கார் கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.