“அப்பாவையும் கூட்டிட்டு வாங்க”…. விஜய் போட்ட கறார் கண்டிஷன்… அலறியடித்த ஓபிஎஸ் குடும்பம்…. பின்னணியில் சீக்ரெட் பிளான்….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் தினமும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், அரசியல் தலைவர்களின் பார்வை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்ட அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) குடும்பத்திற்குள் வெடித்துள்ள புதிய அரசியல் பூசல், தற்போது மாநில அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

   

முன்னாள் எம்.பி-யும், ஓபிஎஸ்-ன் மூத்த மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத், தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தவெகவில் இணையத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காகத் தனது ஆதரவாளர்கள் மூலம் தவெகவின் பனையூர் தலைமை அலுவலகத்திற்குத் தூது அனுப்பியுள்ளார். ஆனால், ரவீந்திரநாத்தின் கோரிக்கையைத் தனிப்பட்ட முறையில் ஏற்க மறுத்த தவெக தலைமை, “தந்தை ஓ. பன்னீர்செல்வத்தையும் கட்சியோடு அழைத்து வந்தால் மட்டுமே இணைப்பைப் பற்றி பரிசீலிக்க முடியும்” என கறாரான நிபந்தனையைச் செக்-மேட்டாக வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

அதேவேளையில், தவெகவின் இந்த நிபந்தனை ஓபிஎஸ் தரப்பில் பெரும் தயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது எம்.எல்.ஏ-வாகப் பதவி வகிக்கும் ஓபிஎஸ், திமுக கூட்டணி ஆதரவு நிலையில் தொடர்வதால், தவெகவில் இணைய வேண்டுமானால் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். ஏற்கனவே பல அரசியல் சவால்களைச் சந்தித்து வரும் சூழலில், கையில் இருக்கும் எம்.எல்.ஏ பதவியையும், கூட்டணியையும் துறந்துவிட்டு புதிய முடிவை எடுப்பது ஆபத்தானது என்பது ஓபிஎஸ்-ன் கணக்காக உள்ளது.

 

மகனின் அவசரமான அரசியல் நகர்வும், தந்தையின் எச்சரிக்கையான நடைமுறை அரசியலும் தற்போது ஓபிஎஸ் குடும்பத்திற்குள்ளேயே கடுமையான மோதலாக வெடித்துள்ளது. தனது அரசியல் வாழ்விற்காக தந்தை எம்.எல்.ஏ பதவியை விட்டுத்தர வேண்டும் என ரவீந்திரநாத் பிடிவாதம் பிடிக்க, ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருவதால் தேனி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்தத் தந்தை-மகன் மோதல் ஓபிஎஸ் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது தவெகவின் கதவுகள் இவர்களுக்குத் திறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.