மைசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகனான முகுந்த் மயூர், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பரிசுப் பொம்மையை விளையாட்டாக வாயில் போட்டபோது அது தொண்டையில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் ஒரே மகனைப் பறி கொடுத்து தவிக்கும் பெற்றாரின் துயர் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இது போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சிறிய அளவிலான ஆபத்தான பிளாஸ்டிக் பொம்மைகளுடன் வரும் நொறுக்குத் தீனிகளைச் சிறு குழந்தைகளிடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் பெற்றோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
