தமிழகத்தில் மீண்டும் பேருந்து விபத்து… ஊட்டி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து… 32 பயணிகளின் நிலை…?

By Nanthini on தை 7, 2026

Spread the love

உதகை அருகே மினி பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி சுமார் 55 பயணிகளுடன் தனியார் மினி பேருந்து ஒன்று சென்றது. 32 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் மணலாடா என்ற இடத்திற்கு அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினி பேருந்து கவிழ்ந்த இடம் விவசாய நிலம் என்பதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அதில் பயணம் செய்த 17 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என 32 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட் ஆப் பகுதி மக்கள் உடனே மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் மூன்று பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.