பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்…!! ரூ.86,000 சம்பளத்தில் அரசு துறையில் வேலை…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு துறைகளில் உள்ள 70 தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி, உதவி இயக்குநர் (வேளாண்மை), சீனியர் அதிகாரி போன்ற உயரிய பதவிகள் அடங்கும்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கப் பதவிகளுக்கு ஏற்ப சிஏ (CA), சட்டப்படிப்பு அல்லது முதுநிலை வேளாண்மைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்ப கால ஊதியமாக 66,200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 86,300 ரூபாய் வரை கைநிறையச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

   

விண்ணப்பதாரர்கள் மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

   

பொதுப்பிரிவினருக்கு 32 வயது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.