2027 பொங்கல் பரிசுத் தொகுப்பு…. அமைச்சர் அறிவித்தார்…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

வரும் 2027 பொங்கல் பரிசுத் தொகுப்பில் 4 முழ வேட்டி மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ள நிலைப்பாடு, தமிழக நெசவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசுத் திட்டத்தின் முதற்கட்டமாக முதல்வர் விஜய் ₹300 கோடியை ஒதுக்கியிருந்த போதிலும், புதிய அளவிலான வேட்டிகளை உற்பத்தி செய்ய தற்போதைய கைத்தறி மற்றும் பெடல் தறிகளில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்குத் தறி ஒன்றுக்கு ரூ.11,000 முதல் ரூ.14,000 வரை கூடுதல் செலவாகும் என்பதால், ஏற்கனவே வாழ்வாதாரப் போராட்டத்தில் இருக்கும் நடுத்தர மற்றும் எளிய நெசவாளர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் நெசவுத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவர்களுக்குக் கூடுதல் பொருளாதார சுமையையே ஏற்படுத்தியிருப்பதாக நெசவாளர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.