ரேஷன் கார்டு இருக்கா?…. தமிழகம் முழுவதும் இன்று… அரசு வெளியிட்ட அறிவிப்பு…. உடனே கிளம்புங்க….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மின்னணு முறையில் தங்களது தகவல்களை சரிபார்க்கும் e-KYC பதிவு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், இதுவரை கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவர்கள் அனைவரும் இன்று நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது விவரங்களை உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதி ரேஷன் கடைகளிலேயே இச்சேவையைப் பெறலாம். மேலும், பணி நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வெளியூர்களில் வசிப்பவர்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு ரேஷன் கடைக்குச் சென்று மிக எளிதாகத் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அட்டைதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது e-KYC பதிவை எவ்வித சிரமமுமின்றி நிறைவு செய்து பயனைடையலாம்.