தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… 3 பேர் பலி, 15 பேர் படுகாயம்…. உச்சக்கட்ட பதற்றம்….!

Spread the love

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது, சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், பேருந்தின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பேருந்துக்குள் பயணம் செய்தவர்களில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது தூக்கமின்மை காரணமாக விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. சமீபகாலமாக ஆம்னி பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் நிகழ்ந்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

தந்தை, தாத்தா, சகோதரர்கள் என வரிசை கட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… பெற்ற தாயே செய்த துரோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…

44 seconds ago

வளர்ப்பு நாயுடன் கொடூரம்… கணவன் வீடியோ எடுக்க மனைவி செய்த அருவருப்பான செயல்… புளோரிடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…

11 minutes ago

“நீ எனக்கு வேணாம் .. அவ தான் வேணும்”… கணவன் போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!

பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து…

15 minutes ago

BREAKING: கழன்றது அடுத்த விக்கெட்… சற்றுமுன் விலகினார்.. EPS-க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

23 minutes ago

நீலாங்கரை டூ கோட்டை… 18 கி.மீ-ல் ஒரு மினி போர்க்களம்… போயஸ் கார்டனுக்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்?… கசிந்த ரகசிய தகவல்…!

திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…

36 minutes ago

“கோட்டு போட்டாச்சு.. முதல்வர் சீட்டை பிடிசாச்சு”… ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்… முதல்வர் கையில் இருக்கும் அந்த ‘மாஸ்டர் பிளான்’…!

தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…

44 minutes ago