ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். எப்படியாவது தங்கப்பதக்கத்தை வென்று தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்கள் வியர்வை சிந்தி உழைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒலிம்பிக் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் குறித்து நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளது.
ஒலிம்பிக் பதக்கத்தில் இருக்கும் அருங்கோன வடிவத்திற்கு ஒரு தனி சிறப்பு அமைந்துள்ளது. அது பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் இருந்து எடுக்கப்பட்ட உலோகத்தால் ஆனது. கடந்த காலங்களில் ஈபிள் டவர் பழுது பார்க்கும் பணிகள் நடந்தது. அப்போது அந்த உலோகம் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தங்க பதக்கம் 529 கிராம் எடை உடையது. அதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் 525 கிராம் எடையுடையது. ஒலிம்பிக் வெண்கல பதக்கம் 454 கிராம் எடை உடையது. மேலும் ஒலிம்பிக் பதக்கம் 85 மில்லி மீட்டர் சுற்றளவு மற்றும் 9.2 மில்லி மீட்டர் அடர்த்தி உடையது. ஒலிம்பிக் பதக்கங்களில் கிரேக்க கடவுளான நைக்கி, ஏதேன்ஸின் அக்ரோபோலிஸ், ஈபில் டவர் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் வளையங்கள் இடம் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக மொத்தம் 5084 பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. 22 வயதான மனுபக்கர் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப்பக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.