சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகும் பாடலாசிரியர் சினேகன்.. கதாநாயகி யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

By Keerthana on ஆடி 31, 2024

Spread the love

பாடலாசிரியர் சினேகன் சீரியலில் நடிக்கப் போக தகவல் தன் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடலாசிரியர் சினேகன். இவர் இதுவரை 600 திரைப்பாடல்கள் மேல் எழுதியுள்ளார். இப்பாடல் அனைத்தும் தமிழ் சினிமாவை சூப்பர் ஹிட் கொடுத்தது. இருந்தாலும் இவர் பிரபலமாகியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டார். இந்த சீசனில் சினேகன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

   

   

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கமலின் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் சினேகன் புதிய சீரியல் நடிக்கப்போகும் தகவல் வெளியாகி உள்ளது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இயக்குனர் பிரியன் இயக்கியிருக்கிறார்.

 

இவர் ஏற்கனவே யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் போன்ற சூப்பர் ஹிட் சீரியலை இயக்கியுள்ளார். மேலும் நடிக்கப் போகும் புது சீரியலுக்கு “பவித்ரா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது தொடர்பான தகவல் மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

இதை தொடர்ந்து கதாநாயகி அனிதா சம்பத் தான் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனிதா சம்பத் பாலிமர் தொலைக்காட்சியில் நியூஸ் 7 தமிழன், மற்றும் சன் தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணி புரிந்தார் . மேலும் இவர் சன் டீவியில் ஒளிபரப்பப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளும் பணியாற்றியுள்ளார்.

2018 இல் சர்கார் மற்றும் 2019ல் காப்பான் ஆகிய திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பொழுது “பவித்ரா”சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இச்செய்தியை தொடர்பான அதிகபூர்வமான தகவலைகலைஞர் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளன . இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அனைவரும் சினேகன் மற்றும் அனிதா சம்பத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.