பிரபல நடிகரான முரளி தமிழில் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீசானது. முன்னதாக பிரேம பர்வா என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் கீதாஞ்சலி, அந்தஸ்து, புதியவன், காலமெல்லாம் உன் மடியில், வளையல் சத்தம், அவள் மெல்ல சிரித்தால், குடும்பம் ஒரு கோயில், புதுவசந்தம், வெற்றிக்கொடி கட்டு, என் ஆச ராசாவே, சமுத்திரம், சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட படங்களில் முரளி நடித்துள்ளார்.

இந்த நிலையில் முரளி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதில் அவர் கூறியதாவது, எங்க அப்பாக்கு என்ன வச்சு படம் எடுக்கறதுல இஷ்டம் இல்ல. ஆனா எங்க அம்மா தான் எத்தனையோ பேர வச்சு நீங்க படம் எடுக்குறீங்க. உங்க பையன வச்சு படம் எடுங்கன்னு சொன்னாங்க. அப்படித்தான் எங்க அப்பா என்ன வச்சு படம் எடுத்தாங்க. கன்னடத்தில் நான் நடிச்ச முதல் படம் பிரேம பர்வா.

அந்த படத்தை 25 லட்ச ரூபாய் செலவில் எடுத்தோம். ஆனால் அந்த படம் அப்பவே ஒரு கோடி ரூபா வரைக்கும் கலெக்ஷன் ஆச்சு. ஹீரோயினுக்கு தான் நல்ல சேர் போடறாங்க. என்ன கண்டுக்க கூட மாட்டாங்க. காபி கேட்டா இருங்க வரேன்னு சொல்றாங்க. இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு. என் வீட்ல அம்மானு கூப்பிட்ட உடனே அஞ்சு நிமிஷத்துல எல்லாம் வரும். ஹீரோயின்க்கு ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கும். எனக்கு ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கும். அவங்களுக்கு நல்ல ஏசி ரூம் குடுத்து இருப்பாங்க.

எனக்கு ஆர்டினரி ரூம் தான் கொடுத்து இருப்பாங்க. அவங்களுக்கு தனி ஏசி கார் கொடுத்திருக்காங்க. ஆனா என்னை மைக்ரோ வேனில் ஏற்றி விடுவார்கள். அது ஒரு குறையா நான் சொல்ல வரல. ஆனா அவங்கள விட நாங்க தான் அதிகமா ஒர்க் பண்றோம். 4 சண்டை காட்சிகள் அது இதுன்னு எல்லாமே நாங்க நடிக்கிறோம். அப்படி இருக்கும்போது அதுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கணும் அப்படின்னு நான் நினைக்கிறேன் என ஓப்பனாக பேசி உள்ளார்.
Omg 🥺🥺🥺🥺🥺
இதுவரை எனக்கு தெரியல…. pic.twitter.com/gK2PonN4Yl— என் உயிர் Superstar ரஜினி ரசிகன் (@KABiLANS7) July 31, 2024
