பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி கடந்த 2005-ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ரிலீசான சூப்பர் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்தார். அனுஷ்கா தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரை இயக்குனர் சுந்தர் சி ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன், சூர்யாவுடன் இணைந்து சிங்கம், அஜித்தின் என்னை அறிந்தால், ரஜினியின் லிங்கா ஆகிய படங்களில் அனுஷ்கா நடித்தார்.
அனுஷ்காவுக்கு பெரும் வரவேற்பை தேடித்தந்த படங்கள் அருந்ததி பாகுபலி. இந்த திரைப்படங்களில் அனுஷ்காவைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி கலந்து கொண்ட பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகை அனுஷ்கா முதலில் நடித்தது உங்க படம் தான். எப்படி அவர்களை எவ்வளவு பெரிய நடிகையா வளர்த்து விட்டீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுந்தர் சி, அய்யோ அது அவங்களாவே வளர்ந்துட்டாங்க.
தெலுங்குல அவங்களோட ஃபர்ஸ்ட் படம் பார்த்தேன். அது ரொம்ப நல்லா இருந்துச்சு. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் நாங்க மீட் பண்ணி பேசிட்டு இருந்தோம். தமிழ்ல நீங்க படம் பண்ணுங்க அப்படின்னு நான் சொன்னேன். அனுஷ்கா அந்த டைம் ரொம்ப பிசியா நடிச்சிட்டு இருந்தாங்க. என்கிட்ட ஒரு போட்டோ காமிச்சாங்க. அதை பார்த்த உடனே எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி உன்ன பிடிச்சி இப்படி ஒரு ப்ரொடியூசர் படம் எடுக்கிறார்? யார் இந்த ப்ரொடியூசர் என்று சும்மா கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். அது அருந்ததி படம். பெரிய பொட்டெல்லாம் வச்சிருப்பாங்க.
அந்த போட்டோவை என்கிட்ட காமிச்சு பாருங்க, இந்த படம் வந்தா நான் பெரிய லெவல்ல வருவேன் அப்படின்னு அனுஷ்கா சொல்லிட்டு இருந்தாங்க. அந்த டைம் நான் அவங்களை சும்மா கிண்டல் பண்ணி இருக்கேன். அவங்க ரொம்ப பிசியா நடிச்சிட்டு இருந்தனால என் படத்துல நடிக்கிறதுக்கு டேட் இல்ல. அவங்களே என் டைரக்ஷன்ல படம் பண்ணனும்னு ஆசைப்பட்டாங்க. அப்போ ஒரு முழு படம் என்னால வர முடியாது. ஒரு 10 இல்ல 12 நாள் வொர்க் இருந்தா சொல்லுங்க நான் வரேன்னு சொன்னாங்க. அப்போதான் ரெண்டு படம் எடுத்தோம். அதில் செகண்ட் ஹாஃப்ல அனுஷ்காவ கொண்டு வந்தேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.